" "" "

இன்றைய ராசி பலன் – 23-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,23-06-2021, ஆனி 09, புதன்கிழமை, வளர்பிறை திரியோதசி திதி காலை 07.00 வரை பின்பு சதுர்த்தசி பின்இரவு 03.33 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.48 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.

ரிஷப ராசி அன்பர்களே:தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. சிலருக்குப் பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை அவசியம்.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மிதுன ராசி காரர்களே: உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

கடக ராசி நேயர்களே: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.தாய்வழி உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும்.

கன்னி ராசி காரர்களே: சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.

துலாராசி உறவுகளே: பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும்.தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.குடும்பத்தில் மனம் விட்டுபேசி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். பெற்றோர்கள் இணக்கமாக இருப்பார்கள்.உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம்.பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

மகர ராசி காரர்களே:பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.பகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உங்கள் முயற்சிக்கு பெற் றோரின் ஆதரவு கிடைக்கும். நம்பிக்கைக்குரிய ஒருவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கும்ப ராசி உறவுகளே:குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம்.உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

பிரபலங்கள் உதவு வார்கள். சிலருக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். நண்பர்கள் அனுசரணை யாக இருப்பார்கள்.உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.வாழ்க்கைத்துணையால் ஆதா யம் கிடைக்க வாய்ப்பு உண்டு.