" "" "

இன்றைய ராசி பலன் – 24-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,24-06-2021, ஆனி 10, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.09 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் காலை 09.10 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு காலை 09.10 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். சகோதர வகையில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்கவேண்டி வரும்.

மிதுன ராசி காரர்களே:பணவரவு சிறப்பாக இருக்கும்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றைக் கூற வாய்ப்பு உண்டு.எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:விருந்தினர் வருகையால் வீடு, களைக்கட்டும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.இளைய சகோதரர்களால் அனுகூலம் உண் டாகும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கன்னி ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும்.

துலாராசி உறவுகளே:வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். காரம் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி நேயர்களே:எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.நண்பர்கள் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:சொந்த பந்தங்கள் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம்.சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும்.

மகர ராசி காரர்களே:உறவினர்களால் சங்கடங்கள் தீரும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.பழையகடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும்.வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.

மீன ராசி நேயர்களே:

பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள்.தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும்.