" "" "

இன்றைய ராசி பலன் – 24.10.2020

இன்றைய பஞ்சாங்கம், 24-10-2020, ஐப்பசி 08, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.59 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 02.38 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.பணவரவு தாராளமாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும்.குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.சின்ன சின்ன அவமானங்கள் மனக் கவலைகள் வந்துபோகும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தேவைகள் நிறைவேற கடன் வாங்க நேரிடும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும்.

கடக ராசி நேயர்களே:தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உறவினரி டம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அதிக உரிமை எடுத்து கொண்டு யாருடனும் பேச வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலைக்கு ஏற்றார் போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். வியா பாரத்தில் பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிட்டும்.பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்..

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாடிக்கையாளர்களிடம் கடிந்து கொள்ளாதீர்கள்.

துலாராசி உறவுகளே:உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.தாய்வழி உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்கு கள் நீங்கும்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும்.

மகர ராசி காரர்களே:ரகசியங்களை வெளியிட வேண்டாம். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கும்ப ராசி உறவுகளே:முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.சகோதர வகையில் அலைச்சல் உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள்.சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.வியாபாரத்தில் கணிசமாக லாபம் வரும்.

மீன ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங் கித் தருவார்.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் குறையும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும்.