" "" "

இன்றைய ராசி பலன் – 25.07.2021

இன்றைய பஞ்சாங்கம். 25-07-2021, ஆடி 09, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவோணம் நட்சத்திரம் பகல் 11.17 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 11.17 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷ ராசி நேயர்களே:. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும்.குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம்.குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். லர் மட்டும் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கடக ராசி நேயர்களே:மனைவி வழியில் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதில் முறியடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:ழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய சிக்கலில் ஒன்று தீரும்.தாயின் ஆலோசனை பயனுள்ள தாக இருக்கும்.உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாராசி உறவுகளே:பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். பணவரவு சுமாராக இருக்கும். தாய்வழி உறவினர்களின் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.

விருச்சிக ராசி நேயர்களே:உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.உறவினர்களால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும்.

தனுசு ராசி அன்பர்களே: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும்.

மகர ராசி காரர்களே:பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும்.சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்ப ராசி உறவுகளே: திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகளின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சகோதரர் கேட்கும் உதவியை மறுக்காமல் செய்து தருவீர்கள்.வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.