" "" "

இன்றைய ராசி பலன் – 25.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 25-11-2020, கார்த்திகை 10, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.10 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 06.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடக ராசி நேயர்களே:

உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நண்பர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப் பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

துலாராசி உறவுகளே:

ட்டை அழகுபடுத்துவீர்கள். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். நண்பர்கள் கேட் கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.வாகனத்தை சீர் செய்வீர்கள். தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால், பேசும்போது பொறுமை அவசியம்.நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகள் கேட்பதை மறுப்பு சொல்லாமல் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் முயற் சிக்கு பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் தடைகள் உண்டாகும்.உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீன ராசி நேயர்களே:

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.