" "" "

இன்றைய ராசி பலன் – 26.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 26-07-2021, ஆடி 10, திங்கட்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.26 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும்.

ரிஷப ராசி அன்பர்களே:அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.

மிதுன ராசி காரர்களே:எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

கடக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும். உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். நண்பர்களின் வருகையால் வீடு களை கட்டும்.உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.நண்பர்களின் உதவியால் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.நட்பால் ஆதாயம் உண்டு.

துலாராசி உறவுகளே:நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும்.மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் – மனை விக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:குடும்பத்தில் மகிழச்சி நிலவும்.தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.

மகர ராசி காரர்களே: பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். இருந்த மனக்குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.சிலருக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.பணவரவு சுமாராக தான் இருக்கும்.

கும்ப ராசி உறவுகளே:முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்று வீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மீன ராசி நேயர்களே:

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் வந்து போகும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும்.