" "" "

இன்றைய ராசி பலன் – 27.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 27-01-2021, தை 14, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.17 வரை பின்பு பௌர்ணமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள்.அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம்.உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.

மிதுன ராசி காரர்களே:

குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும்.வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

டும்பத்தில் இருந்துவந்த கூச்சல் குழப்பம் நீங்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம்.

கன்னி ராசி காரர்களே:

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நண் பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வெளிப் பயணங்களில் கவனம் தேவை.

தனுசு ராசி அன்பர்களே:

. குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

மகர ராசி காரர்களே:

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசி உறவுகளே:

தாராள தன வரவால் கடன்கள் குறையும்.தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீன ராசி நேயர்களே:

உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வண்டி வானகங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிற்பகலுக்குமேல் உறவினர் களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.