" "" "

இன்றைய ராசி பலன் – 28.07.2021

இன்றைய பஞ்சாங்கம்,28-07-2021, ஆடி 12, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.49 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.45 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 10.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். அருகில் இருக்கும் உறவினர்கள் வருகையால குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.பணவரவு தாராளமாக இருக்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மிதுன ராசி காரர்களே:நெருங்கியவர்கள் உதவியாக இருப்பார்கள்.கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவாகவே கிடைக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

கடக ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.வாழ்க்கைத்துணைவர் வழியில் செலவுகள் ஏற்படும்.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

கன்னி ராசி காரர்களே:மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

துலாராசி உறவுகளே:குடும்பத்தில் உடன்பிறப்புடன் ஒற்றுமை பலப்படும்.வாழ்க்கைத்துணைவரிடம் உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிட்டும்.

விருச்சிக ராசி நேயர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்குத் திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. யோகா தியானம் என மனம் சொல்லும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

மகர ராசி காரர்களே:அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்.விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். குடும்பத்தில் உள்ளவர்களில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும்.