google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

இன்றைய ராசி பலன் – 30.06.2020

இன்றைய பஞ்சாங்கம், 30-06-2020, ஆனி 16, செவ்வாய்க்கிழமை, தசமி திதி இரவு 07.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு விசாகம். சித்த யோகம் பின்இரவு 04.04 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேஷ ராசி நேயர்களே:

உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களோடு பேசி மகிழ்வீர்கள். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தவர்கள் வருத்தங்கள் நீங்கி ஒன்றினைவார்கள். சிலருக்குக் குடும்பத்துடன் வீட்டிலேயே குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுன ராசி காரர்களே:

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.சொத்து சம்மந்தமான வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

அரசாங்க சம்மந்தமான விஷயங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது.குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பெண்கள் நகைகள் இரவல் கொடுப்பது, வாங்குவது கூடாது. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.மனைவி மூலம் மருத்துவ செலவுகள் வந்து போகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாராசி உறவுகளே:

மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம்.உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு பெரிய மனிதர்களுடன் தொடர்பு கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:

திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:

உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் டென்ஷன், மறதி, கோபம் வந்து நீங்கும்.திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். எதையாவது நினைத்து குழப்பம் அடைவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.