" "" "

இன்றைய ராசி பலன் – 30.12.2020

இன்றைய பஞ்சாங்கம், 30-12-2020, மார்கழி 15, புதன்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.58 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.55 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆருத்ரா தரிசனம். ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

மிதுன ராசி காரர்களே:

உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.யாருக்கும் பணம் ,நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

கடக ராசி நேயர்களே:

அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும், ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே:

சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

கன்னி ராசி காரர்களே:

வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்களிடம் கேட்டிருந்த பண உதவி கிடைக்கும்.எதையும் தாங்கும் மனோபலமும் கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும், வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுமை அவசியம்.

தனுசு ராசி அன்பர்களே:

திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.மனைவி வழியில் அனுகூலம் உண்டு. நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படுவீர்கள்.

மகர ராசி காரர்களே:

எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்,வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

உடல்நலனில் கவனம் தேவை.பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.அக்கம் -பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.