" "" "

இன்றைய ராசி பலன்! 06.01.2020

இன்றைய பஞ்சாங்கம்:06-01-2020, மார்கழி 21, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.15 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.15 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கிருத்திகை. வைகுண்ட ஏகாதசி. முருக- பெருமாள் வழிபாடு நல்லது.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் வெளிப்படையாக பேச வேண்டாம்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே:

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்..மறைமுக விமர்சனங் களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுன ராசி காரர்களே:

மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள்.உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:

உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சுபகாரியங்கள் கைகூடும். வேலை விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

புதிய முயற்சி சாதகமாக முடியும்.ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும், நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கன்னி ராசி காரர்களே:

சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள்.அடுத் தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். விமர் சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலாராசி உறவுகளே:

மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது.ன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும்.மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

தனுசு ராசி அன்பர்களே:

நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

மகர ராசி காரர்களே:

தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள்.காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம்.

கும்ப ராசி உறவுகளே:

உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீன ராசி நேயர்களே:

உடல் ஆரோக்கியம் மேம்படும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும்.தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.அடுத் தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்