இன்றைய ராசி பலன்! 08.01.2020

இன்றைய பஞ்சாங்கம்: 08-01-2020, மார்கழி 23, புதன்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 03.44 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரோகிணி நட்சத்திரம் பகல் 03.51 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேஷ ராசி நேயர்களே:

சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பொறுமை அவசியம்.கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் எதிர் பாராத லாபம் உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம்.வெளியூரில் இருக்கும் ஆல யங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.பெரியவர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைக்கக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:

உடல் நலனில் கவனமாக இருக்கவும்.திடீர் பணவரவு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

வரவேண்டிய பணம் கைக்கு வரும்.மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் மதிப்பு மரியாதை உயரும், பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

துலாராசி உறவுகளே:

சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும்.காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிக ராசி நேயர்களே:

உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு.

மகர ராசி காரர்களே:

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் நட்பு உண்டாகும்.சிலருக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும்.கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்ப ராசி உறவுகளே:

தாயின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.புதிய வேலைவாய்ப்பு முயற்சிகள் கைகூடும்.அதிகாரிகளால் காரியம் அனுகூலமாகும்.வீட்டிற்கு கலைப் பொருட்களை வாங்குவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள்.நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உடல் நலனில் கவனமாக இருப்பதுடன் பயணம் மேற்கொள் வதையும் தவிர்க்கவும்.