இன்றைய ராசி பலன்! 11.01.2020
இன்றைய பஞ்சாங்கம்:11-01-2020, மார்கழி 26, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 10.41 வரை பின்பு தேய்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.30 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி ப்ரீதி நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும்.பெற்றோர்களால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே:
மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். சிலருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடும்.பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
மிதுன ராசி காரர்களே:
இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும்.வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடக ராசி நேயர்களே:
ராசிக்குள் சந்திரன்இருப்பதால் தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:
தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்.உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதரர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்.அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.உத்தியோகத்தில் வேலைபளு கூடும்.
கன்னி ராசி காரர்களே:
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் பிற்பகலுக்கு மேல் ஈடுபடுவது நல்லது.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
துலாராசி உறவுகளே:
விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.கணவன் – மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:
சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்து போகும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே:
சந்திராஷ்டமம் தொடர்வதால் உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
மகர ராசி காரர்களே:
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும்.உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
கும்ப ராசி உறவுகளே:
உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுவது நல்லது.தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும்.திருமண முயற்சிகளில் சற்று தாமதம் உண்டாகும்.வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.