இன்றைய ராசி பலன்! 11 .09.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

11.09.2019 ஆவணி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை.  திரயோதசி முழுவதும், திருவோணம், சித்தம் பின் பகல் 4.22 வரையாகும்.  சுப நேரம் அதிகாலை 4.33 – 6.03 வரையாகும்.  எமகண்டம் காலை 7.33 – 9.03 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 12.03 – 1.33 வரையாகும்.  குளிகன் இரவு 10.33 – 12.03 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:         உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். உங்கள் செயலில் வேகம் கூடும்.  நண்பர்களிடம் ஆதரவாகப் பேசத் தொடங்குவீர்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.  நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
.

ரிஷப ராசி அன்பர்களே:            தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.  பணப்புழக்கம் கணிசமாக உயரும்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.  சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:         உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.  முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.  உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும்.  தாய்வழி உறவினர்களால் உதவி கிடைக்கும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:          குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரும். தாராள பணப்புழக்கம் இருக்கும்.  உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.  தம்பதியினருக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப் போகும்.  வெளிநாட்டு யோகம் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:            உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். திடீர் வெளியூர் பயணத்தில் நன்மை உண்டு.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.  வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீங்கள்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:           நெருங்கிய உறவினர்களால் மனசங்கடம் வரும்.  பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  வெளிநாட்டு யோகம் ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவீங்கள்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:             தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.  வியாபாரத்தில் இலாபம் சுமாராக இருக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.  புதிய தொழிலை தொடங்குவீங்கள்.  பழைய கடனை வட்டியோடு திரும்பி கொடுப்பீங்கள்.  திருமண யோகம் ஏற்படும். முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் நினைத்தது நடக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.          உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  வியாபாரம் சூடு பிடிக்கும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள்.  சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.  நண்பர்களால் உதவி கிடைக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:           குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறுவீங்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.  மனம் போல் மாங்கல்யம் அமையும்.  தாயின் ஆதரவு கிடைக்கும்.  பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும்.  இன்றைய நாள் உழைப்பால் முன்னேறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.  மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட் களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.  தொழிலில் அதிக இலாபம் கிடைக்கும்.  சகோதரர்களால் முரண்பாடு ஏற்படும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:          குடும்பத்தின் நன்மதிப்பை தருவீர்கள். நண்பர்களுடன் சின்ன விஷயத்திற்காக வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினையை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.  புதிய வீடு வாங்குவீங்கள். தாய்வழி உறவினர்களால் பிரச்சினை வரும்.  வெளிநாட்டு யோகம் ஏற்படும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:        உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள்.  திருமண முயற்சிகள்.  வெற்றி தரும்.   உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.   வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.  பழைய வீட்டை மாற்றி புது வீட்டிற்கு செல்வீர்கள்.  இன்றைய நாள் தடைகளை தாண்டும் நாளாகும்.