இன்றைய ராசி பலன்! 09.04.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

09.04.2020 பங்குனி மாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். பிரதமை காலை 6.29 வரை துதியை பின் இரவு 4.18 வரை சுவாதி பின் இரவு 3.38 வரையாகும். சுப நேரம் காலை 7.36 – 9.06 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.36 – 3.06 வரையாகும். எமகண்டம் காலை 6.06 – 7.36 வரையாகும். குளிகன் காலை 9.06 – 10.36 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              குடும்பத்துடன் பயணம் செய்ய விருப்பம் ஏற்படும். தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடன்பிரச்னைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மைஉண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                 உங்கள் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். யாரையும் முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். குடும்பத்தில் சுமுக நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய நாண்பர்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தளராத மனமும், அயராத முயற்சியும் வெற்றிக்குத் துணையாய் அமையும். சோம்பேறித்தனத்தை தவிர்ப்பது நல்லது. இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரி கள்முக்கியத்துவம் தருவார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                தம்பதியினருக்கு இடையில் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஆன்மீக சிந்தனை மேலோங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களின் வழியில் அதிக செலவுகள் உண்டாகும். திருமண காரியம் தாமதமாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கூடும். உடல் நிலை பாதிப்படையும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வாக்கு சாதுரியம் ஏற்படும். சகோதரர்கள் பலமாக இருப்பார்கள். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             உங்கள் முன் கோபத்தை குறைத்து கொள்ளவும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் யோசித்து இறங்குவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். இன்றைய நாள் புகழ் கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 நீங்கள் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மரியாதைகூடும். திட்டமிடாத செலவுகளை திறமையாக சமாளிக்க முடியும். குல தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். பூர்விக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். கடந்த இரண்டு நாட் களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:            உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.