google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

இன்றைய ராசி பலன்! 02.06.2020

பஞ்சாங்கம்: 02.06.2020 வைகாசி மாதம் 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். ஏகாதசி முன் பகல் 10.02 வரை சித்திரை முன் இரவு 9.28 வரையாகும். சுப நேரம் காலை 10.22 – 11.52 வரையாகும். இராகுகாலம் மதியம் 2.52 – 4.22 வரையாகும். எமகண்டம் காலை 8.52 – 10.22 வரையாகும். குளிகன் காலை 11.52 – 1.22 வரையாகும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேஷ ராசி நேயர்களே:                நீங்கள் சமயோசிதமாகவும் சாதுர்ய மாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது இலாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும். தேக பலம் கூடும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                   அடுத்தவர்களை நம்பி இனி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள் வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். சகோதரர்கள் வகையில் சில செலவுகள் உண்டாகும். இன்றைய நாள் காரிய தடை விலகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் பிள்ளைகளால் சமூகத்திற்கு அந்தஸ் கூடும். இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.திடீர் பயணம் உண்டு. புதிய வீடு வாங்குவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். நட்பால் நல்லது நடக்கும். இன்றைய நாள் எதிர்பாராத உதவி கிட்டும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் இடம்பெறும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். குடும்பத்தில் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.பழைய நண்பர்களால் நன்மை உண்டாகும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                   தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். மனக்கவலைகள் அடியோடு மறையும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீங்கள். இன்றைய நாள் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                    புதியவர்கள் நண்பர்களாவர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதியினருக்கு இடையில் விட்டுக்கொடுத்தல் அவசியம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். புதிய வீட்டு வாங்குவீங்கள். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.  

விருச்சிக ராசி நேயர்களே:.                   உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் நன்மை உண்டு. பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  காதல் திருமணம் கைகூடி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி ஆதரிப்பார். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். முக்கிய நபர்களின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். மனப் பாரம் குறையும். இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்கள் பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டு கொடுத்து உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். குடும்ப கௌரவம் உயரும். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மரியாதை கூடும். இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். புது வாகனம் யோகம் உண்டு. உறவினர்கள் வகையில் சில தொந்தரவு இருக்கும். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 தம்பதியினருக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர் பார்த்த இலாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். குடும்ப ஒற்றுமை உண்டாகும். வீண் செலவுகளைத் குறைக்கவும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. இன்றைய நாள் தன்னம்பிக்கை பிறக்கும் நாளாகும்.