இன்றைய ராசி பலன்! 12.09.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

12.09.2019 ஆவணி மாதம் 26 ஆம் நாள் வியாழக்கிழமை திரயோதசி காலை 6.17 வரை அவிட்டம், சித்தம் முன் இரவு 6.43 வரையாகும்.சுப நேரம் காலை 7.33 – 9.03 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 1.33 – 3.03 வரையாகும்.  எமகண்டம் காலை 6.03 – 7.33 வரையாகும்.  குளிகன் இரவு 9.03 – 10.33 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:           உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.  நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். புதிய வீடு வாங்குவீங்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் புகழ், கௌரவம் உயரும் நாளாகும்.
.

ரிஷப ராசி அன்பர்களே:           உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள்.  பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். திடீர் பயணம் ஏற்படும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:             கடந்த சில நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் குறையும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும்.  விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும்.  உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். குடும்பத்தில் புதிய திட்டம் போடுவீர்கள். சகோதரர்கள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:            உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.  சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.  தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:         உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப நபர்களை அனுசரித்துப் போகவும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு யோகம் உண்டு.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:           உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.  அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுப காரிய செலவுகள் அதிகமாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.  தம்பதியினருக்கு இடையில் அன்பு அதிகரிக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:          உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள்.  ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  பழைய நண்பர்களை மதிப்பீங்கள்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.         உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.  அரசு காரியங்கள் சாதகமாக முடியும். புதிய நண்பர்கள் உங்களை தேடிவருவார்கள்.  உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. உங்கள் அன்பால் அனைவரையும் உருக செய்விங்கள்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:           உங்கள் கோபத்தை குறித்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்,  பழைய நண்பர்களால் நன்மை உண்டாகும், புதிய வீடு வாங்குவீங்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:        நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும்.  கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். ஆன்மீக நாட்டம் கூடும்.  வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.  நீங்கள் எதிர்பார்த்த உதவி உங்களை வந்தடையும். புதிய வாகனம் செலுத்த வேண்டும்.  இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:           உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.  தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் இலாபம் குறையும். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.  வெளிநாட்டு யோகம் ஏற்படும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டும்.  இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

மீன ராசி நேயர்களே:           உங்கள் வீட்டில் சுப காரியம் நிகழும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.  யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.  திருமண யோகம் ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.  நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.