இன்றைய ராசி பலன்! 08.10.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

08.10.2019 புரட்டாதி மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். தசமி பின் பகல் 5.39 வரை திருவோணம் முன் இரவு 11.29 வரையாகும். சுப நேரம் காலை 10.32 – 12.02 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.02 – 4.32 வரையாகும். எமகண்டம் காலை 9.02 – 10.32 வரையாகும். குளிகன் மதியம் 12.02 – 1.32 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள்.  வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.  சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டா கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். இன்றைய நாள் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:             பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.  சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.  பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                    குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.  நண்பர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். வாழ்க்கைத்துணை மூலம் பாக்கியங்கள் கிட்டும்.  உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.  தாயாரின் உதவியை நாடுவீங்கள்.  தம்பதியினருக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.  உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும்.  உத்தியோகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். திருமண காரியம் கைகூடும். கடினமாக உழைத்து தன வசதியை பெருக்கி கொள்வீர்கள்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.  மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:            புது வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். வெளிநாட்டு பயணத்திற்கு நிறைய வாய்ப்புண்டு.  உத்தியோகத்தில் பல புதுமைகளை நிகழ்த்த முடியும்.  சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.  நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:          எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.  குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.  தம்பதியினருக்கு இடையில் சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம்.  தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.  வியபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:            வாக்கு சாதுரியம் ஏற்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். வீட்டில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.  குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும்.  வியபாரத்தில் சக பணியாளர்களின் உதவியுடன் எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். இன்றைய நாள் உற்சாகம் ஏற்படும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.          குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பெற்றோர்கள் அன்பை புரிந்துகொள்ள முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.  தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.  இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              குடும்பத்தில் எல்லாரிடமும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள்.  முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும்.  தம்பதியினருக்கு இடையில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும்.  சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும்.  அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.  சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.  வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.  இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:              எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர்.  உத்தியோத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவர். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை யுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:             குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்ப்புகள் அடங்கும்.  நட்பு வழியில் சில பிரச்சனைகள் வரும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும்.  தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். வியாபாரம் சிறப்பாக அமையும்.  தம்பதியினருக்கு இடையில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.  இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். காதல் திருமணம் நடைபெறும்.  வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.  வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபல மாக இருப்பார்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீங்கள்.  திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.