இன்றைய ராசி பலன்! 16.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

16.02.2020 மாசி மாதம் 04ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் மரணயோகமாகும்.  அட்டமி முன் இரவு 8.48 வரை விசாகம் முன் பகல் 10.35 வரையாகும்.  சுப நேரம் காலை 9.33 – 11.03 வரையாகும்.  எமகண்டம் மதியம் 12.33 – 2.03 வரையாகும்.  இராகுகாலம் மாலை 5.03 – 6.33 வரையாகும்.  குளிகன் மதியம் 3.33 – 5.03 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீண் கோபத்தை தவிர்க்கவும். உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனங்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டு. வீட்டு வசதிகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும்.  மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும்.  இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                  நீங்கள் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நலம் சீராகும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 நீங்கள் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.பழைய கடனை திருப்பி வட்டியோடு கட்டுவீங்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள். .காதல் விஷயங்களில் வெற்றி ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கபடுவீர்கள். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                 உங்கள் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீங்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். வாகனங்களில் பயணிக்கும் போது அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               விலை உயர்ந்த பொருட்களை வாங்கிவீர்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு மூலம் இலாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பும் உயரும். வரவேண்டிய பணம் ஒரு சில சிரமத்திற்கு பின் கைக்கு வரும். மனதில் நேர்மறை எண்ணங்கள் வந்து போகும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

துலாராசி உறவுகளே:               தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு மரியாதை உயரும். புனித யாத்திரையை மேற்கொள்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவர். நண்பர்கள் வகையில் பண விரையம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். இன்றைய நாள் நிம்மதி கிட்டும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                   உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் தவறுகளை உணர்ந்து சரியான பாதையை தேர்ந்தெடுங்கள். வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள்.குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். இன்றைய நாள் விழிப்புணர்வு தேவைப்படும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் இலாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். இன்றைய நாள் நிதானம் தேவைப்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்கள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். குடும்ப நபர்களிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மன தைரியம் கூடும். இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும் .

கும்ப ராசி உறவுகளே:                பிள்ளைகளால் அந்தஸ் கூடும்.சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபார விஷயமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.