இன்றைய ராசி பலன்! 19.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

19.03.2020 பங்குனி மாதம் 06 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தம், கரிநாளாகும். தசமி முன் பகல் 8.30 வரை உத்தராடம் மாலை 6.11 வரையாகும். சுப நேரம் காலை 7.48 – 9.18 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.48 – 3.18 வரையாகும். எமகண்டம் காலை 6.18 – 7.48 வரையாகும். குளிகன் காலை 9.18 – 10.48 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நண்பர்கள் எப்போதும் உதவியாக இருப்பர். இன்றைய நாள் முயற்சிகள் வெற்றி அடையும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               உங்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீங்கள். இன்றைய நாள் புதிய மாற்றங்கள் தொடங்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                   உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். குடும்ப விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். எதிரிகள் விலகி நிற்பர். தாராள பண வரவு இருக்கும். இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும். முக்கிய வேலைகளை தாமதின்றி செய்ய முடியும். வாகனத்தில் பயணிக்கும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள்.நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. மனதில் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். குடும்ப நலம் மேலோங்கும். எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசவும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               உங்கள் முன் கோபத்தை குறைக்கவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்துடன் இன்றைய பொழுது இனிமையாக கழியும். மன இறுக்கம் வந்து நீங்கும். திருமண பேச்சு வார்த்தை வெற்றி பெறும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். பகைவர்களால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். புதிய நபர்களுடன் பழகும்போது கவனம் தேவை. சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படும். இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி இலாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் உண்டு. சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். பழைய வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                காதல் திருமணம் கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். உங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.