இன்றைய ராசி பலன்! 21.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

21.03.2020 பங்குனி மாதம் 08 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். துவாதசி முன் பகல் 10.08 வரை அவிட்டம் முன் இரவு 9.20 வரையாகும். சுப நேரம் மதியம் 3.17 – 4.47 வரையாகும். இராகுகாலம் காலை 9.17 – 10.47 வரையாகும். எமகண்டம் மதியம் 1.47 – 3.17 வரையாகும். குளிகன் காலை 6.17 – 7.47 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                   உங்கள் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். இன்றைய நாள் திறமை வெளிபடும் நாளாகும்.  

ரிஷப ராசி அன்பர்களே:                  குடும்ப கௌரவம் உயரும். பிரியமானவர்கள் சிலர் உதவு கேட்டு வருவர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். இன்றைய நாள் சாதித்துக் காட்டும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கூடும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புக்கள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசவும். பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் குதூகலம் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். தம்பதியினருக்கு இடையில் உறவில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              நீங்கள் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. எதையும் தீவிரமாக யோசித்து முடிவு எடுக்கவும். பழைய கடனை அடைக்க முடியும். உறவினர்களிடத்தில் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்

கன்னி ராசி காரர்களே:                  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதரர்கள் வெற்றி அடையும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                     உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகுறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களால் ஆதாயம் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                  உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரர் உதவுவார். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தரவும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். துணிச்சலாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி வரும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                  தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். நீண்ட நாள்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பயணங்களால் சில அலைச்சல் ஏற்படும். உறவினர்களுடன் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சீராகும். வீட்டில் புதுப் பொருள் சேர்க்கை உண்டாகும். இன்றைய நாள் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பதுநல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவுவரும். உத்தியோக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இன்றைய நாள் வளைந்துக் கொடுக்க வேண்டிய நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். விடாப் பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். திருமண முயற்சிகள் பலிதமாகும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.