இன்றைய ராசி பலன்! 22.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

22.03.2020 பங்குனி மாதம் 09 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். திரயோதசி முன் பகல் 11.38 வரை சதயம் முன் இரவு 11.31 வரையாகும். சுப நேரம் காலை 9.16 – 10.46 வரையாகும். எமகண்டம் மதியம் 12.16 – 1.46 வரையாகும். இராகுகாலம் மாலை 4.46 – 6.16 வரையாகும். குளிகன் மதியம் 3.16 – 4.46 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                   உங்கள் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உங்களுடைய அணுகுமுறையை மாற்றி எதிலும் வெற்றி காண்பீர்கள். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும் இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                     நீங்கள் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். புண்ணிய ஸ்தலங்கள் செல்லும் பாக்கியம் கிட்டும். அடுத்தவர்கள் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே                 தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                    உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்தபந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்கள் அன்பு பாராட்டுவர்.இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். . வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். குடும்பத்தில் தன வரவு கூடும். புதிய நண்பர்களின் சிநேகிதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்ய முடியும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் வந்து நீங்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                  உங்கள் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் தொடர்பாக யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய கடன் தீரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். இன்றைய நாள் கனவு நனவு ஆகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                   உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிய விஷயங்களில் ஆர்வம் கூடும். பண விவகாரத்தில் கவனம் தேவை. தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                உங்கள் முன் கோபத்தை குறைக்கவும். குடும்பத்துடன் ஆலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். குடும்ப பெருமை உயரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                    உங்கள் வெட்டி உள்ளவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதிய வீடு வாங்குவீங்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். தள்ளிப்போன வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். இன்றைய நாள் தடைகள் உடைபடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                  உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறை முகப்பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை மாறும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                தம்பதியினருக்கு இடையில் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து இலாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் எதிலும் கவனம் தேவைப்படும் நாளாகும்.