இன்றைய ராசி பலன்! 26.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

26.03.2020 பங்குனி மாதம் 13 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். துதியை முன் இரவு 7.25 வரை ரேவதி காலை 7.02 வரையாகும். சுப நேரம் காலை 7.44 – 9.14 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.44 – 3.14 வரையாகும். எமகண்டம் காலை 6.14 – 7.44 வரையாகும். குளிகன் காலை 9.14 – 10.44 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினைகள் வந்து செல்லும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். குடும்ப நலனில் மன நிறைவைக் காண்பீர்கள். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் நலம் சீராக இருந்து வரும். இன்றைய நாள் விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                நீங்கள் எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபரியில் போய் முடியும். சிலர் உங்களை தாழ்த்தி பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்து கொள்ள வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே             :உங்கள் அணுகுமுறை மற்றவர்களுக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். சகோதரர்கள் பாச மழை பொழியும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவும் செலவும் சமமாக இருக்கும். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் திட்டங்கள் நிறைவேறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெரும். உடல் ஆரோக்கியம் சீராகும். இன்றைய நாள் சாதித்துக் காட்டும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              நீங்கள் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சிக்கு மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. இன்றைய நாள் தடைப்பட்ட வேலைகள் முடியும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல்பார்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாளாகும்.

துலாராசி உறவுகளே:            உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். யாரையும் குறை சொல்ல வேண்டாம். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை மேம்படும். இன்றைய நாள் எதிர் பாராத நன்மை கிட்டும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:            உங்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் இலாபம் பெருகும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பண வரவு திருப்தியாக இருக்கும். நண்பர்களின் உதவி வேண்டிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அக்கம்- பக்கம் வீட்டாரின் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறி முகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்ப நலம் சீராக இருந்து வரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இன்றைய நாள் மனம் நிறைவு பெறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:              நீங்கள் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். குடும்பத்தில் சுபீட்சம் கூடும். எதிலும் எச்சரிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். இன்றைய நாள் எதிர்ப்புகள் விலகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும்.புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனேமுடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.அக்கம் பக்கத்தாரை அனுசரித்துச் சென்றால், நன்மை உண்டாகும். வி.ஐ.பி.க்களின் தொடர்பு கிட்டும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.