இன்றைய ராசி பலன்! 27.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

27.03.2020 பங்குனி மாதம் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். திருதியை முன் இரவு 9.05 வரை அச்சுவினி முன் பகல் 9.23 வரையாகும். சுப நேரம் காலை 6.14 – 7.44 வரையாகும். எமகண்டம் மதியம் 3.14 – 4.44 வரையாகும். இராகுகாலம் காலை 10.44 – 12.14 வரையாகும். குளிகன் காலை 7.44 – 9.14 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்கவேண்டி வரும். அடுத்தவர்களை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் உங்களைமாற்றிக் கொள்ளப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். மன அமைதியற்ற நிலை ஏற்படும். நயமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். இன்றைய நாள் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               உங்கள் குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். புதிய வீடு வாங்குவீங்கள். தெய்வ பிராத்தனைகளை தாமதிக்காமல் நிறைவேற்றவும். காரிய தடை விலகும். பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                    உங்களுக்கு ஆன்மிக பெற்றோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரைபார்ப்பீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். குடும்பத்தில் தள்ளிப் போன விஷயங்கள் உடனேமுடியும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும்.இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும். உடல் நலம் சீராகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். இன்றைய நாள் மரியாதை கூடும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                   தம்பதியினருக்கு இடையில் அன்னோயம் பிறக்கும் திடீர் பணவரவு உண்டு. புதுமுடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாளாக பார்க்க வேண்டிய இடத்தை பார்க்க நேரிடும். வியாபாரத்தில் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். பல புண்ணிய ஸ்தலங்கள் செல்லும் பாக்கியம் கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் புதிய பாதைதெரியும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துபோவது நல்லது. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்ய முடியும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சொத்து வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். இன்றைய நாள் முயற்சிகள் வெற்றி அடையும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:            உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்துகொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்பார்கள். மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். உறவினர்கள் வழியில் ஆதரவு பெருகும். யாருக்கும் ஜாமின் கையெழுத்திட வேண்டாம். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 உங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். தாயின் ஆதரவு கூடும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               நீங்கள் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். குடும்ப எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். விரும்பியது கிடைக்காவிடினும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும் இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                  உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். குடும்பத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கலில் ஒன்று நிறைவேறும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். இன்றைய நாள் புதிய அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.