இன்றைய ராசி பலன்! 30.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

30.03.2020 பங்குனி மாதம் 17 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் அமிர்தமாகும். ஷஷ்டி முன் இரவு 11.29 வரை ரோகிணி பின் பகல் 2.06 வரையாகும். சுப நேரம் மதியம் 12.12 – 1.42 வரையாகும். இராகுகாலம் காலை 7.42 – 9.12 வரையாகும். எமகண்டம் காலை 10.42 – 12.12 வரையாகும். குளிகன் மதியம் 1.42 – 3.12 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                  உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தம்பதியினருக்கு இடையில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு இருக்கும். நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு நடப்பர். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தம்பதியினருக்கு இடையில் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வீட்டில் விருந்தினர் வருகை இருக்கும். இன்றைய நாள் விழிப்புணர்வு தேவைப்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 நீங்கள் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும் இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              நீங்கள் இராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களை பாச மழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                நீங்கள் தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். முக்கிய விஷயங்களை போராடி முடிக்க வேண்டி வரும். நெருங்கிய உறவினர்களால் சில தொந்தரவுகள் வரக்கூடும். இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும்மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. குடும்ப பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளவும். தூரத்து பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டி நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புவரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தை பெரிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சில நேரங்களில் மறதி தொல்லை இருக்கும். அவசர நேரங்களில் நண்பர்கள் கை கொடுப்பர். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்குவீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                  உங்கள் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை பெருகிக்கொள்ளவும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீங்கள். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உடல் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.. அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.