இன்றைய ராசி பலன்! 31.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

31.03.2020 பங்குனி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையாகும். ஸப்தமி முன் இரவு 11.16 வரை மிருகசீரிடம், சித்தம் பின் பகல் 2.43 வரையாகும். சுப நேரம் காலை 10.41 – 12.11 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.11 – 4.41 வரையாகும். எமகண்டம் காலை 9.11 – 10.41 வரையாகும். குளிகன் மதியம் 12.11 – 1.41 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              நீங்கள் சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:              தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். இன்றைய நாள் பொறுப்புகள் கிடைக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் எதையும் இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உடற்சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து இலாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள்.குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் இலாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்தது நடக்கும். மனதில் இருந்த டென்ஷன் குறையும். நெருக்கமானவர்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். வாக்கு வன்மை கூடும். தம்பதியினருக்கு இடையில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                நீங்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். ஆன்மிக நாட்டம் கூடும். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். தியானத்தால் மன நிம்மதி உண்டாகும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் செயல் வடிவம் பெரும். கடன் பிரச்சனை தீர வழி கிடைக்கும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். காதல் திருமணம் நடைபெறும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைசல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். இன்றைய நாள் வெற்றியடையும் நாளாகும்.