இன்றைய ராசி பலன்! 01.04.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

01.04.2020 பங்குனி மாதம் 19 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் சித்தம், கரிநாளாகும். அட்டமி முன் இரவு 10.35 வரை திருவாதிரை பின் பகல் 2.52 வரையாகும். சுப நேரம் அதிகாலை 4.41 – 6.11 வரையாகும். எமகண்டம் காலை 7.41 – 9.11 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.11 – 1.41 வரையாகும். குளிகன் காலை 10.41 – 12.11 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகள் வரும். குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். இன்றைய நாள் மனநிறைவு கிட்டும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். நாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும்தரவேண்டாம். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி உங்கள் செயல்கள் இருக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                நீங்கள் வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். பணம் சேமிப்பு கணிசமாக உயரும். கோப தாபங்களை கொஞ்சம் குறைத்துக்கொள்ளவும். இன்றைய நாள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பாராத செலவுகள் வரும். அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். இன்றைய நாள் திட்டங்கள் நிறைவேறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:               உங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர்உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதிய வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். புது நண்பர்களின் சேர்க்கை இருக்கும். பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்துநீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டாம். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                நீங்கள் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பூர்விக சொத்து வகையில் இருந்த பிரச்சனை தீரும் உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடுகளை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு. குடும்ப பாரம் கூடும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் அன்பும் அதிகரிக்கும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். இன்றைய நாள் உயர்வு பெறும் நாளாகும்.