இன்றைய ராசி பலன்! 02.04.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

02.04.2020 பங்குனி மாதம் 20 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் அமிர்தமாகும். நவமி முன் இரவு 9.26 வரை புநர்பூசம் பின் பகல் 2.33 வரையாகும். சுப நேரம் காலை 7.40 – 9.10 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.40 – 3.10 வரையாகும். எமகண்டம் காலை 6.10 – 7.40 வரையாகும். குளிகன் காலை 9.10 – 10.40 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:            உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:             தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். உடலிலும், மனதிலும் மகிழ்ச்சி நிலவும். பழைய நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.  

மிதுன ராசி காரர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சில காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரர்கள் அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                 நீங்கள் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்புவீர்கள். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்களில் தடை ஏற்படும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே                உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் கை கொடுப்பர். தர்மசிந்தனை உண்டாகும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:              உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த தயக்கம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் புது தொடர்புகளால் இலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் மனசாட்சிபடி செயல்படும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் நெருக்கடிகள் வந்து நீங்கும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பிள்ளைகள் கேட்டதைவாங்கித் தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:             உங்கள் பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன இலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் அகலும். நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் அமைதியான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். உங்களுக்கு தொல்லை தந்தவர்கள் தானாக விலகுவர். பிரியமானவர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:             சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உடல், மனம் புத்துணர்வுடன் இருக்கும். மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். பணம் சேமிப்பில் கவனம் செலுத்தவும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.