4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..! கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்..!!

பிறந்து நான்கு மாதமே ஆன குழந்தையை கணவருடன் விட்டு விட்டு ஜக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு பறந்த பெண் ஒருவர் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா வை சேர்ந்த ரேணு என்ற பெண் மருத்துவரே இவ்வாறு சென்றுள்ளார். நோய் தொற்று காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டிற்கு மருத்து உதவிகளை கேட்டு வருகிறது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அந்த வகையில் UAE இந்தியாவின் உதவியை நாடியிருந்த நிலையில் இந்தியா உதவ முன்வந்துள்ளது. இங்கு இது வரை 25 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 227 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக UAEக்கு இந்தியாவில் இருந்து 105 வைத்தியர்கள் சென்றுள்ளனர்.

இதில் பெண் மருத்துவரான ரேணுவும் ஒருவர். 4 மாத குழந்தையை கணவருடன் விட்டுவிட்டு வந்தது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று ரேணுவிடம் பேட்டி கண்டுள்ளது. இதன் போது ரேணு கூறிய விடயங்கள் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களை போலவே நானும் மருத்துவ துறையை விரும்பி படித்தேன். வைத்தியராகி பணி புரிந்தேன்.

தற்போது நோய் தொற்று குணப்படுத்தும் பணிக்கு தேர்வு செய்யப் பட்டேன் . குடும்பத்தில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும், அத்துடன் 4 மாதமே ஆன குழந்தை தனிமையாகிவிடுவான் என பயந்தனர். ஆனால் அவர்களுக்கு புரிய வைத்தேன். ஒவ்வொரு வைத்தியரின் உறவினரும் இப்படி சொன்னால் என்னவாகும்.?

மருத்துவம் படித்தது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தான், என் உயிருக்கு பயந்தல்ல என எடுத்து கூறிய போது புரிந்து கொண்டனர். மகனின் பிரிவு என்னால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை, தாய்பால் குடிக்கிறான், என் அணைப்பு தற்போது அவனுக்கு தேவை படும், கடமையா பாசமா என்றால் கடமை முன்னால் வருகிறது,

அதனால் தான் பிரிய மனமின்றி பிரிந்தேன், கணவர், என் பெற்றோர், கணவரின் பெற்றோர் அனைவரும் குழந்தையுடன் இருக்கின்றனர். நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். பெண் மருத்துவரான ரேணுவின் தியாகத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..!!