உங்கள் உடலில் சூடு அதிகமா.? இதனால் ஏராளமான தொல்லைகளை சந்திக்கின்றீர்களா.!? இதோ நொடியில் தீர்வு…!!

தமிழர்களாகிய நம்முடைய சிறப்பியல்புகளில் உன்றுதான் இந்த உணவு முறை. அந்த உணவு முறையானது சாதாரணமானது அல்ல. அதில் பல காரண காரியங்கள் அடங்கியிருக்கும்.அந்தவகையில் நாம் சமையலில் பயன்படுத்துகின்ற வெந்தயத்திற்கு என்னென்ன மருத்துவ குணங்கள் உண்டு என்பதையும் அந்த வெந்தயத்தைக் கொண்டு நாம் செய்யக் கூடிய மருத்துவங்கள் என்ன என்பதையும் பார்ப்போமா?வெந்தயம், பச்சைப் பயிரோடு பொன்னாங்கண்ணி இலையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலையில் உண்டாகும் நோய் நீங்கும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கண்குளிர்ச்சி ஏற்படும். உடல் சூடு தணியும்.தோசை மாவில் வெந்தயம் கலந்து அரைப்பதுண்டு. இதனால் வயிற்று மந்தம் ஏற்படாது. உடலில் தெம்பும் தெளிவும் எற்படும், வெந்தயத்தோடு சீகைக்காயை உடைத்துப்போட்டு ஊறவைக்கவேண்டும். மறுநாள் அதை அவித்துப் பிசைந்து தலைக்குத் தேய்ப்பதுடன் உடலிலும் தேய்த்துக் குளித்துவர உடல் பளபளப்பாகவும் வலுவுடனும் இருக்கும்.

வெந்தயம் குளிர்ச்சியைத் தரக்கூடியது. வெந்தயம் மலக்கட்டைத் தளர்த்தி மளம் இளகியாக்கியாகவும் செயற்படும். நாவறட்சி வாய்வுத் தொல்லையையும் நீக்கும்.வெந்தயத்தில் கல்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதால் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வெந்தயத்தை வறுத்து அதனுடன், நீர் சேர்த்து காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்
வாய்ப்புண், உடல்சூடு ஏற்பட்டால் வெந்தயத்தை அவித்து பனங்கற்கண்டு, பால் சேர்த்து இருந்திவர குணமாகும்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.