மெல்பேர்ன் முதல் சிட்னி வரை தேநீரால் அசத்தும் இந்திய பெண்..!! நீங்களும் வாழ்த்தலாமே…!!

CNN, Forbes, IABCA, ஹிந்த் ரத்தன் என் ஆர் ஐ, என இள வயதிலேயே ஒட்டுமொத்த விருதுகளையும் குவித்த்துவிட்ட இந்த பெண் யார்? இது எப்படி இவருக்கு சாத்தியமானது? சண்டிகாரில் பிறந்த உப்மா விர்தி, இவர் இத்தனை சாதனையையும் செய்தது அவருக்கு மிகவும் பிடித்த “காபி”யினால் என்றால் நம்ப முடிகிறதா.? உப்மாவிற்கு 1 வயதாகும் போது அவரது பெற்றோர் இந்தியாவை விட்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அங்கு தங்கள் வாழ்க்கையை இந்திய முறைப்படி வாழ்ந்த இந்த குடும்பத்திற்கு பிடித்தது காபி தான். அப்பா, அம்மா என வீட்டில் அனைவரும் காபி பிரியர்களாக இருந்த காரணத்தால் உப்மா விர்தியும் காபி பிரியை ஆனார். அம்மாவின் காபி சுவை தான் உலகத்திலேயே பெஸ்ட் என நினைத்த விர்த்திக்கு அது தவறு என தோன்றியது தனது தாத்தா பாட்டியை பார்க்க விடுமுறைக்கு சண்டிகார் சென்ற போது தான்.

!Advert!

பாட்டி வித விதமான சுவைகளில் காபி போட நாக்கு முழுவதும் அடிமையானது. இஞ்சி, காபியில் ஆரம்பித்து ஏலக்காய், மற்றும் வெவ்வேறு மூலிகைகள் என காபி குடித்து பழகினார். தாத்தா ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்பதால் மூலிகைகைகளில் டீ போட்டு கொடுக்க அதன் சுவை நன்றாக பழக்கப் பட்டுவிட்டது. செய்யும் முறை, தேவையான பொருட்கள் என பாட்டியிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

ஆஸ்திரேலியா வந்த உப்மா வீட்டில் உள்ளவர்களுக்கு காபி போட்டு கொடுக்க அதன் சுவையை அனைவரும் பாராட்ட விருந்தினர் நண்பர்கள் என அனைவருக்கும் காபி போட்டு அசத்தினார் உப்மா. இதனால் இவரை இவரது நண்பர்கள் “சாய்வாலி” அதாவது டீக்காரி என கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

!Advert!

வக்கீல் படிப்பை முடித்த உப்மா நண்பர்களுடன் வெளியே சென்ற போது காபி குடிக்க வேண்டுமென காபி ஷாப் தேடி அழைந்துள்ளார். எங்கும் கிடைக்காததால் சோர்ந்துபோனது நீயே இங்கு காபி ஷாப் வைக்கலாமே என நண்பர்கள் கிண்டலடிக்க அது சரியான விடயமாக உப்மாவிற்கு தோன்றியுள்ளது.

வீட்டில் உள்ளவர்களிடம் கேட்ட போது வக்கீல் டீ ஆத்த போறாளாம் என கிண்டல் செய்துள்ளனர். ஆனால் பிடிவாதமாக காபி ஷாப் ஆரம்பித்த உப்மா வெறும் 2 வருடத்தில் ஆஸ்திரேலியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதை தட்டிச் சென்றார்.

!Advert!

ஆஸ்திரேலிய கலை வியாபார சங்கம் இந்த விருது விழாவை ஏற்பாடு செய்தது. இன்று சாய்வாலி “தேநீர் காரி” யாக பிரபலமாகி இருக்கும் உப்மா தன்னை போல் பலரை உருவாக்கி வருகிறார். மெல்போர்ன் தொடங்கி சிட்னி வரை ஏராளமான கடைகள், ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் என அசத்துகிறார் உப்மாவிர்தி. எங்கள் வாழ்த்துக்களும்..!!

ஆஸ்திரேலியாவில் நம்மூர் சமையல் பற்றியும், ஆஸ்திரேலியா தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களையும் Australian Tamil Express YouTube channel இல் அழகாக வழங்குகிறார்கள். இதோ அந்த youtube channel இல் இருந்து ஓர் வீடியோ உங்கள் பார்வைக்காக

இவ் YouTube channel இனை Subscribe செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.>>