" "" "

22 வயதான இளம் பெண் திடீர் மரணம்.!! இலங்கையில் தொடரும் மரணங்களால் அதிர்ச்சியில் மக்கள்.!!

தொடரும் மரணங்களால் இலங்கை மக்களும் அபத்தான நிலையில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு ஒருவர் என இருந்த மரணங்கள் தற்போது 46 என உயர்ந்துள்ளது. இலங்கையில் இது வரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் வயதானவர்கள் மட்டுமே மரணமடைந்த நிலையில் தற்போது சிறு வயதினரும் மரணமடைந்து வருகின்றனர். நேற்றைய தினம் இலங்கையின் காலி மாவட்டம் அம்பலாங்கொடை பகுதியை சேர்ந்த உதாரி விஷ்மிகாவின் என்ற 22 வயது பெண்ணின் மரணம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெடிகல் லாப் ஒன்றில் பணி புரிந்து வந்த விஷ்மிகாவிற்கு திடீரென ஏற்பட உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஷ்மிகா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் இருந்து வந்த விஷ்மிகாவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.!

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
👇🏽👇🏽👇🏽

Click Here to Download Android app👉🏽👉🏽

Click Here To Download IOS App👉🏽👉🏽