மணிரத்தினத்தின் தயாரிப்பில் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகும் “வானம் கொட்டட்டும்” யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா.!
தனது சொந்த படங்களையே தயாரித்து வரும் மணிரத்னம் அவ்வப்போது பிறர் இயக்கும் படங்களையும் தயாரிப்பதுண்டு. தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் தனது சொந்த பட நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனம் லைக்கா புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க மணிரத்தினத்தின் சிஷ்யன் தனா இயக்குனராக அறிமுகமாகின்றார். இப்படத்திற்கு பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.
சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் போன்றவற்றில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில், அடுத்ததாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை 13ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.