வாத நோய் என்பது நாம் நினைப்பது போல் சாதாரண நோய் அல்ல, ஆனால் இலகுவான இயற்கை மருத்துவம் உள்ளது..இதோ உங்களுக்காக..!!
பச்சைவாழைப்பழம் என்பது வாழை பழுக்க முதல் வருவது தான். அதாவது வாழைக்காயை தன் பச்சை வாழை என்கிறோம். இதை சமைத்து சாப்பிடலாம். இதில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து என்பன உள்ளது. இதைச் சாப்பிடுவதால் மாவுச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தி வைக்கும்.வயிற்று போக்கு உள்ளவர்கள் இந்த பச்சை வாழையை உண்ணலாம்.
இதில் கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால், உடலுக்கு சக்தியை வழங்குகிறது. பச்சை வாழைப்பழத்தை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதில் தான் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.பச்சை வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதால், பெருங்குடல் ஆரோக்கியமாக இருக்கும். அது அழுத்தங்களை குறைக்கிறது.
அதனால் டென்சன் உள்ளவர்கள் இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதில் பொட்டாசியம் அதிகமுள்ளதால் மாரடைப்பு, வாதம் ஏற்படாமல் தடுக்கும். இதிலிருக்கும் செரிமானத்தை சீர்செய்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினம் ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
சிலருக்கு இலகுவில் வயிற்றில் பக்டீரியா, வேறு தொற்றுக்கள் வந்துவிடும். அதை தடுக்க இந்த பச்சை வாழை சிறந்து விளங்குகிறது. இதற்கு கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியுள்ளது.சிறுநீரக செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடலிள்ள எலக்ட்ரோலைட்டை சமநிலைப்படுத்தி வைத்திருக்கிறது. உடலின் ஆற்றலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் சத்தை சரியான நிலையில் கொடுத்து வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் பச்சை வாழைப்பழம் உதவுகிறது. இதனால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.