" "" "

பைலட் ஒருவரை 4வதாக ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை வனிதா.! அவரே போட்டுள்ள பதிவு இதோ.!!

வனிதா நான்காவது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் ஆகாஷ், ஆனந்த ராஜ், பீட்டர் பால் என மூவரை திருமணம் செய்து பிரிந்ததுடன் ராபர்ட் மாஸ்டருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து பிரிந்தார்.

வனிதாவிற்கு எந்த ஒரு திருமணமும் நிலைக்கவில்லை, சரி இனி திருமணமே வேண்டாம் குழந்தைகள் போதும் என அவரது பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தி வனிதா பைலட் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது.

வடநாட்டுக்காரரான பைலட்டுடன் காதலில் விழுந்த வனிதா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. அனைவரும் இதனை உண்மை என நம்பி திட்ட ஆரம்பித்திருந்த நிலையில் இவை அனைத்தும் பொய் என வனிதாவே கூறியுள்ளார். நேற்று வெளியான தகவலில் உண்மை இல்லை நான் சிங்கிள் தான் என கூறியுள்ளார்.!