google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

தாயின் திருமணம் பற்றி முதல் முதல் அதிரடியாக பேசிய வனிதாவின் மூத்த மகள்.! மகளின் பேச்சால் கண்ணீர் விட்டு அழுத வனிதா…

திருமணம் நடந்து இரண்டு நாட்கள் முழுமையாக முடியாத நிலையில் பல போராட்டங்களை சந்தித்து வருகிறார் வனிதா. இது வரை அவர் இரண்டு திருமணங்கள் லிவிங் டுகெதர் என வாழ்ந்தாலும் எதுவும் நிலைக்கவில்லை. இந்த நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த பீட்டர் போல் என்பவரை திருமணம் செய்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

திருமணம் வரை அமைதியாக இருந்த பீட்டரின் மனைவி எலிசபெத் ஹெலன் திருமணத்தின் பின் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். முறைப்படி விவாகரத்து பெறாமல் கணவர் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் விசாரணை இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் வனிதா பற்றியும் வனிதாவின் திருமணம் பற்றியும் சமூக வலைத்தளங்களில் தவறான விவாதங்கள், எதிரான கருத்துகள் என குவிந்து வருகிறது. இந்த நிலையில் வனிதாவின் இரண்டாவது மகள் பிரபல சேனலுக்கு வழங்கிய பேட்டியில். என் அம்மாவின் திருமணம் என்னை பாதிப்பதாகவும், என் எதிர்காலம் பாதிப்பதாகவும் கூறுகின்றனர்.

சிலர் அம்மாவை விட்டு வெளியே வரும் படியும் அறிவுரை வழங்குகின்றனர். இவர்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக கூற ஆசைப்படுகிறேன். நான் பிறந்ததில் இருந்து என்னை என் தாய் கொஞ்சம் கூட நோகடித்தது இல்லை, எனக்கு எந்த ஒரு குறையும் வைத்ததும் இல்லை. அருகில் இருந்து என் அம்மாவின் வேதனைகளை எங்களை காப்பாற்ற அவர் பட்ட துன்பத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

என் அம்மாவின் எந்த ஒரு முடிவும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்காது. அப்படி பாதிப்பு ஏற்படும் ஒரு விடயத்தை என் அம்மா செய்யவும் மாட்டார். என் அம்மாவை தவிர எங்களை பாதுகாப்பவர் யாரும் இல்லை. உங்கள் அன்புக்கு நன்றி நான் யாருடைய சொல்லுக்கும் மாற மாட்டேன்.

எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அம்மாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எத்தனை துன்பத்திலும் அம்மாவோடு இருப்பேன் என தெளிவாக தெரிவித்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த வனிதா கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!

Video Copyrights & Credits Owned by :Cineulagam