" "" "

சில வருடங்களுக்கு முன்பு ஆர்யா மற்றும் நயன்தாராவிற்கு திருமணம் என அச்சடிக்கப் பட்ட திருமண அழைப்பிதல்.! இணையத்தில் பதிவிட்ட நயன் & ஆர்யா.!! பின் என்ன நடந்தது.. இதோ திருமண அழைப்பிதல்.!!

வனிதா செய்தால் தவறு நயன்தாரா செய்தால் சரியா என சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யமான விடயங்கள் பகிரப் பட்டு வாதங்கள் ட்ரண்டிங் ஆகி வருகின்றது. பவர் ஸ்டார் இயக்கி நடிக்கும் திரைப்படம் பிக் அப், ட்ராப், இந்த திரைப்படத்தில் நடிகை வனிதா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்பட போஸ்டரை பகிர்ந்த வனிதா இதய ஸ்மைலிகள் போட்டிருந்தார். அத்துடன் குறித்த புகைப்படங்கள் அனைத்தும் திருமண புகைப்படம் போல் இருந்தது. பலரும் வனிதாவிற்கும் பவர் ஸ்டாருக்கும் திருமணம் என்றார்கள்.

சிலர் திட்டி தீர்த்தார்கள். இந்த நிலையில் பட ப்ரமோஷனுக்காக செய்ததாக வனிதா தரப்பு விளக்கம் கொடுத்தது, படத்திற்காக இதெல்லாம் செய்யலாமா என்றும் குரல்கள் ஒளித்தது. இதனை பார்த்த வனிதா ரசிகர்கள் ராஜா ராணி திரைப்படத்தின் போது படத்தின் பிரமோஷனுக்காக நயன் தாராவிற்கும் ஆர்யாவிற்கும் திருமணம் என கார்ட் அடித்து ரசிகர்களை ஏமாற்றினார்கள்.

இருவருக்கும் திருமணம் என நம்பி ரசிகர்கள் கார்ட்டை பாதுகாத்தனர், ஆனால் திரைப்படத்திற்கு என கூறி ஏமாற்றி விட்டனர். இது சரியா என கிண்டல் செய்து வருகின்றனர்.!!