" "" "

பிரபல நடிகருக்கும் வனிதாவிற்கும் திருமணம் முடிந்ததா.? வைரலாகும் மாலையுடன் இருக்கும் புகைப்படம்.!!

பிரபல நடிகர் ஒருவரை நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்டுள்ளதாக புகைப்படம் வைரலாகி வருகிறது. இன்றைய தினம் காலையில் ஜோதிடர் ஒருவர் வனிதாவிற்கு 5வது திருமணம் நடக்கும் என்றும் ஐந்தாவது கணவரின் முதல் எழுத்து எஸ் என்று இருக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது பற்றி வனிதா பதில் சொல்லுவார் என காத்துக்கொண்டிருக்க வனிதா திடீரென பவர் ஸ்டார் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். அதில் பவர் ஸ்டாருக்கும் வனிதாவிற்கும் திருமணமானது போல் உள்ளது, இருவரும் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.

சிரித்த முகத்துடன் வனிதா இருக்கிறார். இது ஏதாவது திரைப்பட ஷூட்டிங்காக இருக்கலாம் என ஒரு சில ரசிகர்களும் இல்லை இது திருமண புகைப்படம் ர்ன வனிதாவின் ரசிகர்களும் கூறி வருகின்றனர். எது உண்மை என்பது வனிதாவிற்கே தெரியும்.!!