" "" "

வனிதாவின் மூன்றாவது திருமணமும் பழி வாங்கும் செயலும். உண்மையை உடைத்த காஜல் பசுபதி…!!

வனிதாவின் திருமணம் தான் இணையத்தில் இன்றைய பேச்சாக உள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் வனிதா பீட்டரின் மூன்றாவது திருமணம் தவறு என்பதாகவே அனைவரும் கருத்து சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் வனிதாவின் திருமணம் சரி என்றும் 3வது திருமணத்தில் தவறு இல்லை என்றும் நடிகை காஜல் பசுபதி அதிரடி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதில் வனிதாவின் திருமணம் வைத்து பலர் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றனர். யார் என்றே தெரியாதவர்கள் எல்லோரும் வனிதா வனிதா என பேட்டிக் கொடுப்பது வியப்பாக இருக்கிறது, முன்னணி நடிகைகளான ராதிகா, லட்சுமி, இன்னும் பல நடிகைகள் மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களே.. அன்றைய காலத்தில் கூட வனிதாவை விட மோசமான திருமணங்கள் நடந்தது.

உண்மையில் வனிதாவின் திருமணத்தை தடுப்பவர்கள் வனிதாவை பழி வாங்கவே செய்கின்றனர். வனிதாவின் மூன்றாவது கணவரின் மனைவி எலிசபெத் ஹெலன் திருமணம் பற்றி அறிந்திருந்தார். தெரியாது என்று இப்போது மறுத்து பயன் இல்லை. வனிதாவிற்கு 27ம் திகதி திருமணம் நடக்கப் போகிறது எனவும் வீட்டில் எனவும் வனிதா திருமணத்திற்கு முன்பே பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார்.

இதனால் அனைவரும் திருமணம் பற்றி அறிந்துவிட்டோம், திருமணம் முடிந்த பின் தான் எலிசபெத் புகார் கொடுக்கிறார், மகன் வதத்தி என நினைத்ததாக கூறுகின்றார். இதெல்லாம் வனிதாவின் பணத்தை பறிப்பதற்கும் பழி வாங்குவதற்குமான செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!