" "" "

வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி எடுத்த திடீர் முடிவு..!! வனிதாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…!!

வனிதாவின் திருமணம் ஒரு பக்கம் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க வனிதாவால் அவரது மூத்த மகன் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக நடிகர் ஆகாஷின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். வனிதாவின் 19 வயதில் நடிகர் ஆகாஷிற்கும் வனிதாவிற்கும் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப் பட்டது. திருமணம் முடிந்து முதல் வருடமே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்றியது, இருப்பினும் பெற்றோர் சமாதானம் செய்து வாழ வைத்தனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆகாஷ் வனிதா தம்பதியினருக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பின் தனது குழந்தைகள் வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மகன் ஸ்ரீஹரி ஆகாஷுக்கும், ஜோவிதா வனிதாவிற்கும் என தீர்ப்பு வழங்கப் பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் வேறு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.

வனிதா திருமணத்திற்கு மேல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஆகாஷோ திருமணம் செய்துகொள்ளவில்லை. மகனுக்காக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் செய்தது பற்றி நடிகர் ஆகாஷிடம் பேச முயற்சித்த போது அவர் பேசவில்லை.

அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் இது பற்றி கேட்ட போது வனிதாவின் சர்ச்சை திருமணங்களால் ஆகாஷுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை. ஆனால் ஸ்ரீஹரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார், ஆரம்பத்தில் இது பாதிக்காவிட்டாலும் தற்போது சிலர் இதனை வைத்து ஸ்ரீஹரியை கிண்டல் செய்கிறார்கள்,

சமுக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டால் போதும் பல தவறான கொமெண்ட் செய்கிறார்கள், வெளியில் சென்றால் வனிதாவை சொல்லி கிண்டல் செய்கிறார்கள், இதனால் மன உளைச்சலில் இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் இருந்து நீங்கி விட்டார். யாரோடும் பேசாமல் வீட்டுக்குள் இருக்கிறார். என தெரிவித்துள்ளனர்..!!