“வனிதாவிற்கு அன்பை விட இது தான் முக்கியம்” என் வாழ்க்கையை அழித்துவிட்டார் வனிதா, பீட்டர் பால் அதிரடி.!!
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு வாத்தாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். 16 போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் வந்த வனிதா வீட்டில் செய்த அராஜகத்தால் ரசிகர்கள் வெளியேற்றினார்கள்.
வெளியே வந்த வனிதா இரண்டு வாரம் மட்டுமே வெளியே இருந்தார் மறுபடியும் தொலைகாட்சி பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தது. மறுபடியும் சர்ச்சைகளுடன் வெளியேறிய வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். அதன் பின் சமையல் யூடியூப் ஒன்றை ஆரம்பித்தார்.
அதில் உதவிக்கு வந்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணம் பல சர்ச்சைகளை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு வந்த வனிதா சில நாட்கள் கூட பீட்டர் பாலுடன் வாழவில்லை. குடி போதைக்கு பீட்டர் பால் அடிமையாகி விட்டதாக கூறி அவரை பிரிந்தார்.இதனை அவரே வெளியிட்டார்.
இந்த நிலையில் வனிதாவின் கணவர் பீட்டர் பால் அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறுகையில்.. நான் வனிதாவை மிகவும் நம்பினேன், அவரது குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருந்தேன், ஆனால் வனிதா நன்றி மறந்தவர்.
குடியை காரணம் காட்டி என்னக் விரட்டி விட்டார். அது மட்டும் இன்றி மீடியாக்களுக்கு என்னை தவறாக காட்டி விட்டார். இதனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இதனால் என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. வனிதாவிற்கு அன்பை விட பணம் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.!