" "" "

திருமணம் பற்றி கேட்டவர்களுக்கு தனது மகனை அறிமுகப் படுத்திய நடிகை வரலட்சுமி சரத்குமார். இதோ வைரலாகும் Video.!!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அன்று சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப் பட்ட நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தந்தையின் உதவி இன்றி சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

ஆரம்ப காலங்கள் வரலட்சுமிக்கு கடினமாக இருந்த போதும் பின்னர் அதனை கடந்து சினிமாவில் தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கின்றார். அது மட்டும் இன்றி ஆண்களால் பாதிக்கப் படும் பெண்களுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி கஷ்டப் படும் பெண்களுக்கு உதவி வருகிறார்.

ஏற்கனவே நடிகர் விஷாலுடன் காதல் என கிசுகிசுக்கப் பட்ட நிலையில் விஷால் அனிஷா ரெட்டி என்ற பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதால் உடைந்து போனது, விஷால் அனிஷாவை பிரிந்த போதிலும் வரலட்சுமி விஷாலுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

வரலட்சுமியிடம் எப்போது திருமணம் என பலரும் கேட்டு வந்த நிலையில் அவர்களுக்கு பதில் கூறும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இவன் தான் என் மகன் மகன், எப்போதும் என்னை பிரியாதவன்” என குறிப்பிட்டு அவரது செல்லப் பிராணியான நாய்குட்டியின் Video வெளியிட்டுள்ளார். இதோ வரலட்சுமியின் மகனின் Video.!!