" "" "

20 வருடங்களின் பின் நடிகை வசுந்திரா தாஸ் ரசிகர்களுக்கு நன்றி கூறி போட்ட பதிவு.! புகைப்படத்தை பார்த்து இது வசுந்திராவா என வியக்கும் ரசிகர்கள்.!!

கமலஹாசனின் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வசுந்திரா தாஸ். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என திரைப்படங்களில் நடித்தார். மீண்டும் தமிழில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சிட்டிசன் திரைப்படத்தில் நடித்தார். திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன போதும்.

வசுந்திரா. தாஸுக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனால் மீண்டும் தெலுங்கு, கன்னடம் என நடித்த இவர் பின்னர் திருமணம் முடித்து திரைதுறையை விட்டு ஒதுங்கினார். வசுந்திரா தாஸ் நடிப்பை தாண்டி சிறந்த பாடகியும் கூட “சக்கலக்க பேபி உட்பட ஏராளமான பாடல்களும் பாடினார்.

சுமார் 20 வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த வசுந்திரா தாஸ் “சிட்டிசன்” திரைப்படம் வெளியாகி 20 வருடத்தை நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் வசுந்திராவை பார்த்த ரசிகர்கள் இது வசுந்திரா தாஸா என வியந்து வருகின்றனர்.!