" "" "

இளைஞரிடம் வீடியோ காலில் தன் அழகை காட்டி 1.5 கோடி ரூபாயை ஏமாற்றிய பெண்.!! அன்பு என நம்பி ஏமார்ந்து போன லண்டன் வாழ் தமிழ் இளைஞன்.!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் வவுனியாவை சேர்ந்த 23 பெண்ணிடம் கோடிகணக்கான பணத்தை 7 மாதத்தில் இழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் லண்டன் குடியுரிமை பெற்று சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பெற்றோர் மணமகள் தேடி வந்த நிலையில் வவுனியாவை சேர்ந்த அழகிய பெண்ணை 7 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்துள்ளனர்.

இளைஞனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தாரிடம் 50 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி மாதம் இவர்க்ளின் திருமணம் நடக்க இருந்துள்ளது. ஆனால் திடீரென கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மணப்பெண் வவுனியாவை சேர்ந்த இளைஞனுடன் ஓடிபோய் திருமணம் செய்துகொண்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனை அறிந்து அதிர்ந்து போன இளைஞர் இலங்கை பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். குறித்த புகாரில், திருமணம் நிச்சயம் செய்தபின் இருவரும் வீடியோ காலில் பேச ஆரம்பித்தோம், இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனது, அதனால் என் பெற்றோருக்கு வரதட்சணை கொடுப்பதற்காக நான் 50 லட்சம் ரூபாய் குறித்த பெண்ணுக்கு கொடுத்தேன், அத்துடன் ஐ போன், அவரது மாத செலவுக்காக பணம், ஆடைகள், நகைகள் என 1.5 கோடி ரூபாய்க்கு அதிகமாக கொடுத்துள்ளேன்.

மனைவி ஆகப் போகிறவள் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் செய்தேன் நான் அனுப்பிய பணத்தில் கார் எடுத்துள்ளார், வேறு இளைஞரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். எனக்கு என் பணம் நகை போன் அனைத்தும் வேண்டும், அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதரங்கள் உள்ளது என கூறி அதனையும் இணைத்துள்ளார். பொலீஸார் குறித்த பெண்ணிடமும் அவரது பெற்றோரிடமும் பொலீஸார் விசாரணைய்சி ஆரம்பித்துள்ளனர்.!!