" "" "

“பொட்டு வைத்திருப்பதால் தான் இத்தனை ஆபாச வீடியோ” வீரலட்சுமியின் அதிரடி பதிவு.!!

தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீர லட்சுமிக்கு ஆபாச படங்கள் வீடியோக்கள் அனுப்பிய இருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வந்ததாக கூறி பொலீஸில் புகார் அளித்திருந்தார்.

ஆதாரத்துடன் புகார் அளித்த போதும் பொலீஸார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பதால் வீரலக்‌ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பொலீஸார் 15 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் குற்றவாளிகளுக்கு தான் தண்டனை கொடுப்பேன் என்றும் ஆண் உறுப்பை அறுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பொலீஸார் நடத்திய விசாரணையில் ஆபாச புகைப்படங்கள் அனுப்பியவர்கள் கைது செய்யப் பட்டனர். இதனை தொடர்ந்து வீர லட்சுமி வெளியிட்ட பதிவில் எனக்கும் ஆபாச வீடியோ அனுபியவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட எந்த பகையும் இல்லை, இவர்கள் இதனை செய்தது நான் வன்னிய பெண் என்பதால் தான் என ஆரம்பித்து பேஸ்புக்கில் மிக நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.!!