தமிழர்கள் மறந்து போகும் கலாச்சார நிகழ்வுகளை வேஷ்டி சட்டையில் நேர்த்தியாக செய்து அசத்திய வெளி நாட்டவர்கள் .! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

வேட்டிச் சட்டையில் அச்சு அசல் தமிழர்கள் போல் மாறி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகி மக்களை வியக்க வைத்துள்ளது. சென்னையில் பிரபல தனியார் சுற்றுலா நிறுவனமான “கிளாசிக் ரன்” கடந்த வருடம் இந்தியாவின் பாரம்பரியங்களை சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகம் செய்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதற்கு ஆட்டோ சாலஞ்ச் என பெயரிட்டது. இந்த சாலஞ்சில் வெளிநாட்டவர்கள் பங்கு பெற்றலாம், தேர்வாகி இறுதி சுற்றுக்கு செல்பவர்கள் ஆட்டோவில் சென்று தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு ஒன்றில் கலந்து வெற்றி பெற வேண்டும் இவர்களுக்கு பரிசும் உண்டு. இந்த ஆட்டோ சாலஞ்ச் கடந்த 28ம் திகதி ஆரம்பமானது..

இறுதி சுற்றுக்கு இத்தாலி, நியூஸிலாந்து, சீனா, துருக்கி, ஹெங்கேரி நாடுகளை சேர்ந்த 11 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான இறுதி போட்டியாக பொங்கல் போட்டி அறிவிக்கப் பட்டது. ஆறு குழுக்களாக இவர்கள் போட்டியிட்டனர். தூத்துக்குடி அருகாமையில் சாயர்புரம் தனியார் தோட்டமொன்றில் இந்த பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டது.

அங்கு கிராம மக்களிடம் அறிவுரை பெற்ற வெளிநாட்டவர்கள் உடனடியாக வேஷ்டி சட்டைக்கு மாறியதுடன் பெண்கள் சாரியில் அசத்தினார்கள். அது மட்டும் இன்றி பொங்கலை சிறப்பாக செய்ததுடன் பொங்கல் பொங்கும் போது குலவை சத்தம் எழுப்பியும் பொங்கலோ பொங்கல் என குரல் கொடுத்தும் அசத்தினார்கள். தமிழர்கள் சிலர் மறந்து போன தமிழரின் கலாச்சார நிகழ்வுகளை தமிழர்களை விட வெளிநாட்டவர் நேர்த்தியாக செய்தது வியப்பில் ஆழ்த்தியுள்ளது..