அண்ணன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் உயிருக்கு போராடும் தம்பி..! 14 வருடங்களாக தம்பியின் உயிரை காப்பாற்றும் அண்ணன்..! கண் கலங்க வைத்த வீடியோ..!!
சொத்துக்காக அடித்துக் கொள்ளும் சகோதர்களிடையே என் சொத்தே நீ தான் என தம்பிக்காக வாழும் அண்ணன் பற்றிய தகவல் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் விபின். வீடு குடும்பம், வேலை என்று மகிழ்ச்சியாக இருந்த விபின் அவரது தம்பியான லிஜோ மீது அதிக பாசம் வைத்திருந்தார். தம்பியை படிக்க வைப்பதே தனது முதல் கடமை என இருந்துள்ளார்.
கடவுளுக்கு தான் நல்லவரை பிடிக்காதே விபினின் தம்பி லிஜோ கல்லூரிக்கு சேர்ந்துள்ளார். சுமார் 14 வருடங்களுக்கு முன்பு தனது 19 வயதில் கல்லூரிக்கு சென்ற லிஜோக்கு திடீரென் காய்ச்சல் வர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது ஒரு வகை வைரஸ் காய்ச்சல் என கூறியுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் லிஜோக்கு மூச்சுத் திணறல் ஏற்பட தனியார் வைத்தியசாலையில் லிஜோவை அனுமதித்தார் விபின்.
இங்கு திடீரென லிஜோவின் கைகால்கள் செயலிலழந்து போனது. லிஜோக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. சுமார் மூன்றரை ஆண்டுகாலம் ICUவில் லிஜோக்கு சிகிச்சை அளிக்கப் பட்டும் குணமாகவில்லை, வீடு, வாகனம்,சொத்துக்கள் அனைத்தையும் விற்று தம்பிக்கு சிகிச்சை செய்தார் விபின். ஆனால் குணமடையவில்லை. வாடகை வீட்டில் குடியேறினார் விபின்.
தம்பியை வீட்டிற்கு அழைத்து வந்து தம்பியை காப்பாற்றிவிடலாம் என பணிவிடை செய்ய ஆரம்பித்தார். சுமார் 14 வருடங்கள் முகம் சுழிக்காமல் தம்பி குணமாகிவிடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். சொந்தங்கள் விலகி சென்றது, எங்கே பணம் கேட்டு விடுவானோ என்ற பயத்தில் நண்பர்கள் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர் குடும்பத்தினர், ஆனால் சில சமூக ஆர்வாலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கடவுளாக வந்து உதவினார்கள்.
இருப்பினும் மருத்துவ செலவுக்காக விபின் போராடுகிறார். என் அண்ணன் என்னை கைவிட மாட்டார் என்று லிஜோ நம்பிக் கொண்டிருக்க தம்பியின் நம்பிக்கையை அண்ணன் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார். இவை அனைத்தையும் அறிந்த மனித உரிமை ஆர்வாலர் ஸ்ரீஜேஷ் பிபினுக்கு உதவ முன் வந்துள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விபினுக்கு உதவும் படி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இதனால் விபினுக்கு உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது, இது இப்படி இருக்க தம்பி தனிமையை உணர கூடாது என்பதற்காகவும் தம்பியின் குரல் கேட்டால் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தம்பிக்காக மைக் ஒன்றை செட் செய்துள்ள விபின் வீட்டில் ஸ்பீக்கர் வைத்துள்ளார். திருமணமான விபினுக்கு 6 வயதில் குழந்தை உள்ள நிலையில் இவரது மனைவி மன நலம் பாதிக்கப் பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது..!!