" " " "

” 12 வருடங்கள் விஜயுடன் பேசுவதில்லை, விஜயின் படங்களை திரும்பியும் பார்ப்பதில்லை.”தளபதி விஜய் மீது வெறுப்பை கொட்டும் நெப்போலியன்.. காரணம் இது தானாம்..!!

அண்மையில் நடிகர் நெப்போலியன் விஜய் பற்றி கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அன்று ஹீரோ, வில்லன், குணச்சித்திர நாயகன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்திய நெப்போலியன் இளைஞர் யுவதிகள் முதல் முதியவர்களையும் கவர்ந்தார். சினிமாவில் மட்டும் இன்றி அரசியலிலும் தனியான இடம் பிடித்த நெப்போலியன் தனது மகனுக்காக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அண்மையில் பிரபல சேனல் ஒன்று நெப்போலியனின் வாழ்க்கைப் பற்றி பேட்டி கண்டது. அதில் சுமார் 12 ஆண்டுகளாக நடிகர் விஜயுடன் கதைப்பதில்லை என கூறிய நெப்போலியன் விஜயின் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை. பார்க்கவும் பிடிக்காது என கூறினார். இது பற்றி காரணம் கேட்ட போது..போக்கிரி படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்…

அதில் போக்கிரி படபிடிப்பின் போது எனது நண்பர்கள் விஜய் பார்க்க வேண்டும் என கேட்டார்கள், அத்துடன் விஜயின் தீவிர ரசிகர்கள் என்பதால் அழைத்துச் சென்றேன். விஜய் கரவனில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். விஜய் சந்திக்கலாமே என நண்பர்களுடன் சென்றேன்.எங்களை அவரது மெய் காவலர் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. நான் விஜய் எனக்கு தம்பி போன்றவர்.

விடுங்க என கேட்ட போது விஜய் மட்டும் தான் உலகிலேயே சிறந்தவர் என்பது போல் பேசியது கோபத்தை தூண்ட திட்டிவிட்டேன். இதனால் சக நடிகர்கள் அங்கு கூடிவிட்டனர். இதன் போது வெளியே வந்த விஜய் “சார் உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா, காற்றுத் தர வேண்டுமா ” என பெரிதாக கத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்து நெப்போலியன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று சிறந்த ஒரு நடிகர், அரசியல் வாதி என இருந்தும் மரியாதை கொடுக்காமல் விஜய் நடந்துகொண்ட முறை அன்று விமர்சிக்கப் பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த தலை தூக்கியுள்ளது..!!