" "" "

விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் வெளியிட்ட வீடியோ..! இதோ..!!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு “800” என்ற பெயரில் திரைப்படமாக்கும் முயற்சிகள் இடம்பெற்றது. இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்ட நிலையில் திரைப்படத்தின் போஸ்டரும் வெளியாது. போஸ்டரை பார்த்த மக்களும் பிரபலங்களும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட விஜய் சேதுபதி எதிர்ப்பு அதிகரித்ததால் படத்தில் இருந்து விலகினார். இதனை “நன்றி வணக்கம்” என கூறி முடித்திருந்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதி திரைப்படத்தில் நடிப்பதாக நினைத்த பலர் அவருக்கு தேவையில்லாத வார்த்தையால் திட்டியது மட்டும் இன்றி விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது மிகவும் வேகமாக பரவியதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் படி புகார்கள் குவிந்தது. இதனை தொடர்ந்து, பொலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில் மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இலங்கை மக்களுக்கு நடந்த கொடுமைகள் தெரிந்தும் விஜய் சேதுபதி அவர்கள் முரளிதரனின் திரைப்படத்தில் நடிக்க ஓகே சொன்னதால் கோபத்தில் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருக்கிறது..!

Video Copyrights & Credits Owned by :Lankasri News