" "" "

” மூச்சுத் திணறல், மூச்சு எடுக்க முடியவில்லை, உயிருக்கு போராடுகிறேன், என்னை வைத்திய சாலையை விட்டு வெளியேற்றி விட்டனர்” நடிகை விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ..! வெளியேற்றியது இவர் தானாம்…!!

அண்மையில் அதிகம் பேசப் படும் விஜயலட்சுமி சீமான் போர் இன்னும் அதிகரித்து செல்கிறது. பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக நடித்த நடிகை விஜய லட்சுமி அதன் பின் ஏராளமான தமிழ் கன்னடா திரைப்படங்களில் நடித்ததுடன் சீரியல்களிலும் நடித்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுடன் திரைப்படம் ஒன்றில் பணிபுரிந்த விஜயலட்சுமி பின் அவருடன் கிசுகிசுக்கப் பட்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சில வருடங்கள் சீமான் தனது கட்சியில் விஜயலட்சுமியை வைத்திருந்தார். பின் இருவரும் பிரிந்தனர். சீரியல் தொலைகாட்சி என இருந்த விஜயலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் ரஜினிகாந்த் உட்பட பலரின் உதவியுடன் குணமடைந்தார்.

அதன் பின் சீமானுடன் அவரது உறவு பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு சீமானை திட்டி தீர்த்து வந்த நிலையில் விஜயலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்தார். இதன் போது காப்பாற்றப் பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சீமான் மற்றும் சீமானுக்கு ஆதரவாக பேசிய ஹரி நாடார் ஆகியோரின் ஆட்கள் தொல்லை செய்ததால் தான் தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது இன்னுமொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தன்னை சீமானின் ஆதரவாளர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் மூச்சு விட முடியவில்லை என்றும், அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ள விஜயலட்சுமி சீமானின் மிரட்டலினால் பயந்த வைத்தியசாலை நிர்வாகம் தன்னை வெளியேற்றிவிட்டதாகவும் உடல் நலக் குறைவால் தான் அவஸ்த்தை படுவதாகவும் விஜயலட்சுமி மேலும் தெரிவித்துள்ளார்.. !